சி.பி.எஸ்.இ., தேர்வில் கோவை மாணவி அசத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 07, 2019

சி.பி.எஸ்.இ., தேர்வில் கோவை மாணவி அசத்தல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.85% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதல் இடத்திலும்; 99% தேர்ச்சியுடன் சென்னை 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேசிய அளவில் கோவை மாணவி 3-ம் இடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் வெளியாகினது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.85% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதல் இடத்திலும்; 99% தேர்ச்சியுடன் சென்னை 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதற்கிடையே, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவையை சேர்ந்த காவ்யவர்ஷிணி என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தரு ஜெயின் என்ற மாணவி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 1-ம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகள்: www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய சிபிஎஸ்இ இணையதளங்களின் முகப்பு பக்கத்தில் ‘‘பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2019’’ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.அதைத்தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பள்ளி ரோல் நம்பர், ஹால்டிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்து சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து மாணவரின் தேர்வு முடிவு திரையில் தோன்றும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews