👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
சிதம்பரம் அருகே, அரசு பள்ளி கழிப்பறையில், மர்மமான முறையில் மாணவி துாக்கில் தொங்கிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் மெய்யாத்துாரைச் சேர்ந்த, 13 வயது சிறுமி அதே ஊரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.நன்றாக படிக்கக் கூடிய இவர், காலையிலேயே வந்து பள்ளியை திறப்பார். மாலையில், பள்ளியை பூட்டி, சாவியை எடுத்துச் செல்வார்.
வழக்கம் போல், நேற்று காலை பள்ளியை திறந்த மாணவி, வகுப்பறை ஜன்னல்களை திறந்து உள்ளார். இதை, இரு மாணவர்கள், பார்த்துள்ளனர். பின், வெளியில் சென்ற மாணவர்கள், 8:30 மணியளவில் பள்ளிக்கு வந்து, ஆண்கள் கழிப்பறைக்கு சென்ற போது, அங்கு, மாணவி துாக்கில் தொங்கியபடி கிடந்தார்.இதைப் பார்த்து, மாணவர்கள் அலறினர். கிராம மக்கள், உடற்கல்வி ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் ஆகியோர் ஓடி வந்து, மாணவியை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மாணவி இறந்தார்.
மாணவி வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை. அவர் துாக்கில் தொங்கிய துப்பட்டாவும், அவருடையதல்ல. பெண்கள் கழிப்பறைதனியாக இருக்கும் போது, ஆண்கள் கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.இதனால், மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக, கிராம மக்கள் கூறுகின்றனர்.
மாணவியின் உடல், பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இச்சம்பவம் குறித்து, குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். சக வகுப்பு மாணவரோடு, சில நாட்களுக்கு முன், மாணவிக்கு தகராறு ஏற்பட்டது. அதனால், தற்கொலை செய்திருக்கலாம் என, பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்