உயர்கல்வி இனி ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 02, 2019

உயர்கல்வி இனி ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகும்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய அரசு கல்வியை வியாபாரமாக்கி அந்த வியாபாரத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடும் வேலையை தொடங்கிவிட்டது. உலக வர்த்தகக் கழகம் கல்வியை விற்பனை பண்டமாக்க வற்புறுத்தியதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு வணிகத்துறை அமைச்சரையே கல்வி சம்பந்தமான விவாதங்களில் பங்குபெற அனுப்புகிறது. ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் காலத்தில் கல்வித் துறை மனிதவள மேம்பாட்டுத்துறை என மாற்றி அமைக்கப்பட்ட ‘தனியார்மய, தாராளமய, உலகமய [LPG] காலம்’ கல்வி வியாபார தொடக்கம். இன்று கல்வி முழுவதுமே கல்விக் கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜக அரசாங்கம் TSR. சுப்ரமணியன் அறிக்கையைக் கிடப்பில் போட்டதாகக் கூறிக்கொண்டே அதில் கூறியவற்றை அமலாக்கிக்கொண்டிருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களை அரசு மானியம் தந்து வளர்ப்பது, ஊக்குவிப்பது 1956 பல்கலைக்கழக மானியக் குழு நிறுவப்பட்டபோது கூறப்பட்ட பழங்கதை. இப்போது பாஜக அரசாங்கம் UGCயை கலைத்துவிட்டு ‘இந்திய உயர்கல்வி ஆணையம்’ [Higher Education Commission of India] அமைக்க முனைந்துள்ளது. UGC மூலம் நிதி உதவி தருவதற்குப் பதிலாக ‘உயர்கல்வி நிதி முகவாண்மை’ [Higher Educational Financial Agency] மூலம் கடன் வழங்குவதைத் திட்டமாக அறிவித்துள்ளது. மற்றொரு முக்கியமான முடிவு UGC 2017 வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களையும் 10 தனியார் உயர்கல்வி நிறுவனங்களையும் மீச்சிறப்பு நிறுவனங்களாக அறிவிப்பது [Institutions of Eminence IOC]. இவ்வாறு சில நிறுவனங்களை மட்டும் அறிவிப்பதன் நோக்கத்தை மனிதவள மேம்பாட்டுத்துறை கடந்த ஆண்டு, அதாவது பிப்ரவரி 5, 2018 அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளது.
1. உலகத்தரம் வாய்ந்த பயிற்றுவிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களாக மீச்சிறப்பு நிறுவனங்களை உருவாக்குவது. 2. இந்த மீச்சிறப்பு நிறுவனங்களை உலக தரவரிசை பட்டியலில் 500க்குள் இருக்கும்படி செய்வது. 3. இந்த மீச்சிறப்பு நிறுவனங்கள் 30% வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். 4. இவை 25% பணியிடங்களில் வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
5. தங்களின் பயிற்றுவிப்பு திட்டத்தில் 20% தொலைநிலைக்கல்வி பிரிவுகளாக இருக்கலாம். 6. இவை உலகத்தரம் வாய்ந்த 500 நிறுவனங்களுடன் கல்வி உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளலாம். 7. எந்தவித வரைமுறையுமின்றி வௌிநாட்டு மாணவர்க்கான கட்டணங்களை நிர்ணயிக்கலாம். 8. கலைத்திட்டம் (curriculum) பாடத்திட்டம் (Syllabus) முடிவு செய்ய முழு உரிமை. 9. IOE திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். என ஒன்பது முக்கியமான முடிவுகளோடு வெளியான மனிதவள மேம்பாட்டுத்துறை அறிக்கை 22.2.18 தேதிக்குள் நிறுவனங்களை விண்ணப்பிக்கச் சொன்னது. விண்ணப்பித்த நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுத்துறை முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் கோபால்சாமி தலைமையில் அமைத்த குழு, அரசு நிறுவனங்களில் ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆகிய மூன்றையும் தனியார் நிறுவனங்களில், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், மணிப்பால் உயர்கல்வி அகாடமி, ரிலையன்ஸின் ஜியோ ஆகிய மூன்றையும் தேர்ந்தெடுத்தது.
இந்த ஜியோ பல்கலைக்கழகம் கட்டடம் கூட இல்லாத நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவலம் கல்வியானது வியாபாரிகளின் கையடக்கம் என காட்டவில்லையா? மீச்சிறப்பு நிறுவனக் கொள்கைகளைப் பார்ப்போம். அரசு மீச்சிறப்பு நிறுவன 100 இடங்களில் 30 இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கென்றால் இட ஒதுக்கீட்டுக்கான இடங்கள் குறையவில்லையா? அரசு மீச்சிறப்பு நிறுவனங்களின் நிதி கட்டுமானம் வெளிநாட்டு மாணவர் படிப்பு கட்டணம், தொலைதூரக் கல்வி வியாபாரம் சார்ந்ததாக வடிவமைக்கப்படுமானால் இந்த நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிக்க நினைப்பது கானல் நீர்தானே! தனியார் மீச்சிறப்பு நிறுவனங்களின் வியாபாரச் சந்தை ஏழை மாணவர்க் கானதல்ல.பாடத்திட்ட உள்ளடக்கம் குறித்து முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதைக் காணும்போது இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்கள் வரலாறு இனி எங்கே பாடமாக இருக்கப்போகிறது?
சாதிய கட்டுமானம் நிலவுடைமை ஆதிக்கம் சார்ந்த சமூகவியல் பிரச்னைகள் எங்கே கற்பிக்கப்படப்போகிறது? இந்த நாட்டு மக்கள் சார்ந்த கால, இலக்கியம் பாடமாக இருக்குமா? என்றால் இருக்காது என்பதுதான் பதில்.பாஜக அரசு மாணவருக்கான உதவித்தொகையில் குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் 200 புள்ளி 13 சுழற்சி முறை எனக் கூறி ஒடுக்கப்பட்ட பிரிவு சார்ந்த பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி பெரும் உரிமையை ஒழிப்பதோடு, கல்வி வியாபாரச் சந்தையை ஊக்குவிக்கும் நடவடிக்கையும் எடுத்தால் உயர்கல்வி என்பது இனி ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு எட்டாக்கனிதான். கல்வி விற்பனை பண்டமாக்கியபின் வியாபாரச் சந்தையை ஊக்குவிப்பதுதானே நியாயம் எனக் கேட்கலாம்…பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை அறிவுத்தேடலுக்கான கல்விக்கும், தாய்மொழி வழி கல்விக்கும் அரசுப் பள்ளிகளும், அரசு கல்லூரிகளும் அரசு பல்கலைக்கழகங்களும்தான் உயிர்நாடி. மத்திய அரசும் மாநில அரசும் அவற்றை காப்பாற்றுவதே நமக்கான கல்வி உரிமையை உத்தரவாதப்படுத்தும். கல்வி பெறும் உரிமை அடிப்படை உரிமை என மாணவர் இயக்கங்களைக் கட்டமைக்கும் வேலையில் அரசு கல்வி நிறுவன ஆசிரியர்கள் இறங்கவில்லையெனில் அவர்கள் பணியாற்றும் அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் காணாமல்போகும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews