Breaking

Sunday, March 24, 2019

திறமையை காட்டுங்க... பரிசுகளை தட்டிச்செல்லுங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'ஸ்டார்ட் -- அப்' வந்தாலும் வந்தது, மக்களின் திறமைகளை கண்டுபிடிக்க, பல திட்டங்கள், போட்டிகள் வந்து விட்டன. 'இந்தியா இன்னவேஷன் குரோத் புரோகிராம் - 2019' என்ற 'ஸ்டார்ட் அப்' திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் மற்றவர்களுக்காக, ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட மாணவர் அல்லது மாணவர் குழு கலந்து கொள்ளலாம். 'டாப் 30'ல் வந்தால், உங்களுக்கு உலகத்தில் பெருமை வாய்ந்த ஐ.ஐ.டி., மும்பை மென்டர்ஷிப் அளிக்கும். மேலும், 'பிட்சிங்' வாய்ப்புகளும் கிடைக்கும். 'டாப் - 10'ல் வருபவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் ரூபாய், 10 லட்சம் பரிசு, ஐ.ஐ.எம்., அகமதாபாத் 'மென்டர்ஷிப் பூட் கேப்' கலந்து கொள்ளும் வாய்ப்பு மற்றும் 'டாப்- 4'ல் வருபவர்களுக்கு ஒவ்வொருவருக்கும், தலா, 25 லட்சம் ரூபாய் பரிசும் மற்ற பல உதவிகள் கிடைக்கும்.
இதுபோல், மற்றவர் களுக்கான, 'ஓப்பன் சேலஞ்சில்' 'டாப்- 50'ல் வருபவர்களுக்கு, ஐ.ஐ.எம். அகமதாபாத் 'பூட் கேம்ப்'பில் பங்கேற்கவும், பிட்சிங் வாய்ப்புகளும் கிடைக்கும்.'டாப் 10'ல் வருபவர்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தலா, 25 லட்சம் ரூபாய் பரிசும், 'இன்குபேஷன், மென்டர்ஷிப் சப்போர்ட், இன்வெஸ்டர்ஸ் மீட்டிங்கில், பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். விபரங்களுக்கு, தீதீதீ.டிணஞீடிச்டிணணணிதிச்tஞுண்.டிண என்றஇணையதளத்தில் பார்க்கலாம். ஏப்., 21ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.2018ல் 'ஸ்டார்ட் அப்' எப்படி?கடந்த 2014ல், ஏறத்தாழ, 28 ஆயிரம் கோடி ரூபாயாகத்தான் இருந்தது. தற்போது, 77 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.743 'டீல்' மூலம், 637 கம்பெனிகளுக்கு இந்த நிதி கிடைத்துள்ளது.
நிதி கிடைத்த கம்பெனிகளில், 'பின்டெக்' மற்றும் 'இ-காமர்ஸ்' கம்பெனிகளேஅதிகமானவை. வழக்கம் போல், இந்தியாவில் உள்ள நகரங்களில், பெங்களூரு அதிகமான நிதியை பெற்று உள்ளது.சீன கம்பெனிகள்மட்டும், கடந்தாண்டு, 'வெஞ்சர் கேபிடல் பண்ட்' மூலம், ஏறத்தாழ, 40 ஆயிரம் கோடி ரூபாய், இந்தியாவின் 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளன. 'பின் டெக், புட் டெக்' கன்ஸ்யூமர், லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டில் மட்டும், ஏறத்தாழ, 7,000 கோடிமதிப்பிலான கம்பெனிகள்,இந்தியாவுக்கு புதிதாக கிடைத்தன. மாரிக்கோ மற்றும் ஆர்கானிக் தேங்காய் பொருட்கள்'மாரிக்கோ' என்ற நிறுவனம், இதுவரை, எண்ணெய் வியாபாரத்தில் பெரியளவில் கவனம் செலுத்தி வந்தது. தற்போது 'வர்ஜின் தேங்காய் எண்ணெய்' மற்றும் தேங்காய் சம்பந்த ஆர்கானிக் பொருட்களை, 'கோகோ சோல்' என்ற பிராண்ட் பெயரில், கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. விரைவில், தென்னிந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
அதன்பின், ஏற்றுமதி மார்க்கெட்டிலும் கவனம் செலுத்தும்.தமிழகத்தில் பலர், ஆர்கானிக் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். அவர்களுடைய ஆர்கானிக் தேங்காய்களை விற்பனை செய்ய, தற்போது 'மாரிக்கோ'வும் ஒரு வழியாக இருக்கும். சந்தேகங்களுக்கு: ண்ஞுtடதணூச்ட்ச்ண.ண்ச்tடச்ணீணீச்ண@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட், அலைபேசி: 98204-51259. யு.கே.,வுக்கு காய்கறி இந்திய காய்கறிகளுக்கு, யு.கே.,யில் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. யு.கே., பவுண்டுக்கு எதிராக கிடைக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் விமான கட்டணம் குறைவு என்பதே, இதற்கு காரணம். கடந்த, 2017- - 18ல் இந்தியாவிலிருந்து யு.கே.,வுக்கு, 168 கோடி ரூபாய் மதிப்பு அளவுக்கு, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வரும் வருடங்களில், இன்னும் அதிகரிக்கும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog