Breaking

Sunday, March 24, 2019

மி.வா., தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு முடிவு வெளியிட உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மின் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலை, இணையதளத்தில் வெளியிட, மின் வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு முடிவு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், தொழில்நுட்ப உதவியாளர் பதவியில், 'எலக்ட்ரிகல்' பிரிவில், 500; 'மெக்கானிக்கல்' பிரிவில், 25 என, மொத்தம், 525 காலி பணியிடங்களை நிரப்ப, 2016ல் எழுத்து தேர்வு நடத்தியது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களிடம், நேர்காணல் நடத்த, மின் வாரியத்திற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில், இம்மாதம், 11ம் தேதி முதல், 15ம் தேதி வரை, நேர்காணல் நடத்தப்பட்டது. ஒரு பதவிக்கு, ஐந்து பேர் என, மொத்தம், 2,625 பேரிடம் நேர்காணல் நடத்தப் பட்டது.
எழுத்து மற்றும் நேர்காணலில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களின் அடிப்படையில், தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த விபரம், நீதிமன்றத்தில், சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' 'தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, நியமன உத்தரவுகள் வழங்க, தடை ஏதும் உள்ளதா' என, தேர்தல் ஆணைய வழக் கறிஞரிடம் கேட்டது. அதற்கு, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன், ''நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த, முன் அனுமதி தேவையில்லை; வெறும் தகவல் மட்டுமே போதுமானது,'' என்றார். இதையடுத்து, தொழில்நுட்ப உதவியாளர் பதவிக்கு, தேர்வானவர்கள் விபரத்தை, இணைய தளத்தில் வெளியிடுமாறு, நீதிபதிகள் உத்தர விட்டனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog