👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யூ.பி.எஸ்.சி) ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் போட்டித் தேர்வை நடத்திவருகிறது. அதன்படி 2013-ம் ஆண்டிற்கான தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகினர். இதில் தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றனர்.
இந்த 109 பேரில், பினோஜெபின் என்ற பார்வையற்ற மாணவியும், முகமது அஸ்ரப் என்ற மாற்றுத்திறனாளி மாணவரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்த சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி பினோ ஜெபின் பிறவியிலேயே பார்வையற்றவர்.
இவர் 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். பாடங்களை பிரெய்ல் முறையில் படித்து தேர்வு எழுதியது கவனிக்கத்தக்கது. இப்படிப்பட்ட பலருக்கும் கண்களாக அமைந்து வழிகாட்டி தேர்வுக்குத் தயார்படுத்திவருகிறது அடையாறு எக்ஸ்னோரா மகளிர் கில்டு என்ற அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ‘தர்ஷினி’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு.
முழுக்க சேவை மனப்பான்மையோடு செயல்படும் தர்ஷினி அமைப்பிடமிருந்து உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் IAS உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்ட அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றுச் சென்றபோது அங்கிருந்தவர்களைக் கண்டு மிகவும் வியப்பாக இருந்தது. முழுவதும் பெண்களால் அமைக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கும் இந்த அமைப்பின் முதன்மையான நோக்கமே விழி இழந்தோருக்கு வழிகாட்டுவதுதான்.
சமூக சேவகரான பத்மா நரசிம்மனை நிறுவனத் தலைவராகவும், மங்கை கிருஷ்ணசாமி, பாக்கியம் அருணாச்சலம், லீனா பத்மா, R.சௌமியா ஆகியோரை அறங்காவலர்களாகவும் கொண்ட இந்த அமைப்பு முற்றிலும் பார்வை இழந்த மாணவர்களுக்குக் கல்வி கற்கவும், வேலை பெறவும் ஆற்றுகின்ற பணிகள் எண்ணற்றவை.
முற்றிலும் பார்வை இழந்த மாணவர்கள், பார்வைக் குறைபாடுள்ள மாணவர்கள் இவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுதல், அவர்கள் உடல்நலம் காப்பது, அவர்களுக்குத் தன்னம்பிக்கை தந்து ஆளுமைத் திறன் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து பயிற்சி முகாம்கள் நடத்துவதுமே எங்கள் வாழ்வின் நோக்கம் என்கிறார்கள் தர்ஷினி அமைப்பாளர்கள்.
இந்திரா நகரில் உள்ள இளைஞர் விடுதியில் வாரத்தின் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சியளிக்கப்படுகின்றது. இங்கு வரும் பார்வையற்ற மாணவர்களுக்கு தர்ஷினி அமைப்பின் உறுப்பினர்கள் கல்வி கற்பித்தல், ஒளிநாடா வழியாக பயிற்சியளித்தல், தேர்வுக்கான பயிற்சியளித்தல் என்று அத்தனையும் செய்கிறார்கள்.
சிறிதுகூட முகம் சுளிக்காமல் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதி செயல்படுகிறார்கள்.‘‘பதினெட்டு ஆண்டுகளாகச் செயல்படும் இந்த அமைப்பினால் 600-க்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 70 மாணவர்கள் MA. B.ED., M.Ed. படித்தும், 50 மாணவர்கள் M.Phil/Ph.D. படித்தும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்.
அதுமட்டுமல்ல 15 மாணவர்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்களில் விளையாட்டு வீரர்களும், பல்வகை திறன் உடையவர்களும் உள்ளார்கள். தர்ஷினி அறக்கட்டளை சார்பில், தென் மண்டல அளவில், பார்வையற்றோருக்கான, தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடத்தி வருகிறோம்.
இந்தப் போட்டி, இந்திரா நகர் யூத் ஹாஸ்டலில் நடைபெறுகிறது. அதில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து, 150 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.அதேபோல 100 மாணவர்களுக்கு IITயில் கணினிப் பயிற்சி அளித்தோம். அவர்களில் 50 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினோம். பிரசிடென்சி கல்லூரியில் பார்வை இழந்தோருக்கு இதேநிலையில் உள்ள ஆசிரியர்கள் மூலம் கணினிப் பயிற்சி மையம் நடத்துகிறோம்’’ என்று மங்கை கிருஷ்ணசாமி தங்கள் சேவையைப் பட்டியலிட்டார்.
‘‘டெல்லி பகத்சிங் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணிபுரியும் முனைவர் வரதராஜன், விரிவுரையாளர் முனைவர் பானு கோபன், தியாகராஜா கல்லூரி விரிவுரையாளர் மஹேந்திரன், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பிஎச்.டி. மாணவர் ரமேஷ் பாபு, சேலம் வங்கியில் பணிபுரியும் முனைவர் வேணுகோபால், நந்தனம் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை விரிவுரையாளர் முனைவர் முனியப்பன், பிரசிடென்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளர் முனைவர் நாகராஜன் போன்றோர் எங்கள் முத்தான சாதனையாளர்களில் சிலர்’’ என்று பத்மா நரசிம்மன் அகமகிழ்ந்து கூறினார்.
சௌமியா குறிப்பிடும்போது, ‘‘இவர்களுக்கு சவாலே இப்போது போட்டித் தேர்வுகள்தான். அதிலும் கணிதம் தான். இவர்கள் IAS போன்ற உயர்பதவி பெற சிறந்த பயிற்சி வேண்டும். அந்தப் பணியைத்தான் நான் துவங்கியுள்ளேன். கரும் பலகை இவர்களுக்கு பயன்படாத நிலையில் வாய்மொழி வழியாகவும், ஆன்லைனில் உள்ள ‘ஜாஸ்’ போன்ற பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமான மென்பொருள் மூலமாகவும் கணிதம், ரீசனிங், பொது அறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை சொல்லித்தரத் தொடங்கியுள்ளேன். சவாலான செயல் என்றாலும், மகிழ்வான ஒன்று என்று உணர்கிறேன்’’ என்கிறார்.
சௌமியாவிடமும் மாணவர்களிடமும் பேசியபோது பார்வையிழந்த மாணவர்கள் சந்திக்கும் சில சிக்கல்களை முன்வைத்தார்கள். அவை…
1. B.Ed., M.Ed படிப்பவர்களுக்கு Project Working Model, Asignment இவையெல்லாம் செய்ய இயலவில்லை. மற்றவர் உதவியுடன் தான் செய்கிறோம். Working Model விலை கொடுத்து வாங்குகிறோம். இதற்குப் பதிலாக வேறு பாடத் தேர்வு வைக்கலாம்!
2. ஆன்லைன் போட்டித் தேர்வு எழுதும்போது இவர்கள் விடையளிக்க கிடைக்கும் நேரம் போதவில்லை.
3. ஆன்லைனில் உள்ள ‘ஜாஸ்’ போன்ற பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமான மென்பொருள் அரசு தருவதில்லை. சாதாரண மாணவர்கள் போல்தான் ஆன்லைன் தேர்வைச் சந்திக்க வேண்டியுள்ளது.
‘‘தர்ஷினி அமைப்பை நாடி வரும் இந்த பார்வையிழந்த மாணவர்கள், பெரும் வசதி படைத்தவர்களல்ல, ஏழ்மையிலிருந்து வருகின்றவர்களே! இயற்கையாக உண்டான குறையை எதிர்த்து போராடி, எதிர்நீச்சலிட்டு முன்னேறத் துடிக்கும் இவர்களது மன உறுதிக்கு துணையாக எப்போதும் நாங்கள் இருப்போம். ஆனால் அரசும் இவர்களின் மீது அக்கறை காட்ட வேண்டும்’’ என்று வேண்டுகோளோடு முடித்தார் சௌமியா.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்