👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பிரசாரங்களும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஊடகங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் சார்பில் ஒளிபரப்பக்கூடிய விளம்பரங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அறை, தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்களவை தேர்தலையொட்டி விதிகளை மீறி பதிவிடப்படும் தகவல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வளைத்தள நிறுவனங்கள் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளனர். சமூக வளைத்தளங்களில் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக கூகுள், பேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர், டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் ஆதாயத்திற்காக சமூக வளைத்தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விதிமுறைகளை மீறி தகவல்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகளை தேர்தல் நடத்தும் நாளில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக பதிவிடப்பட்டால் அதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தடை சான்றிதழ் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சி விளம்பரங்கள், பரப்புரை பாடல்களை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. சமூக வளைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்