DEE - அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 04, 2019

DEE - அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பி உள்ள சுற்றிக்கை:தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். தொடக்க பள்ளிகளில், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, மூன்று பெற்றோர், வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், இந்த மையத்தில், உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள், மூன்று பெற்றோர், ஒரு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மையத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.இந்த உத்தரவை பின்பற்றி, குழந்தைகள்உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு மையம் அமைத்தது குறித்து, இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews