Breaking

Saturday, March 23, 2019

ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுக்க அரசு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே, அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குனரகம் சார்பில் பள்ளிசெல்லா குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்நிலையில் மக்களவை பொதுத்தேர்தலை காரணம் காட்டி பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பை தவிர்க்க முடியாது என்றும், வழக்கம்போல அப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குனரகம் சார்பில் சிஇஓக்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரி மாதங்களில் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இதில் அடையாளம் காணப்படும் பள்ளிசெல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் உண்டு உறைவிட சிறப்பு மையங்கள் மற்றும் இணைப்பு பயிற்சி மையங்கள் மூலம் தொடர் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து நடப்பு ஆண்டும் முதல்கட்டமாக ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு பகுதியிலும் 6 முதல் 18 வயதுக்குள் பள்ளிசெல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கணக்கெடுப்பு பணியை அந்தந்த மாவட்ட சிஇஓக்கள் நடத்தி முடித்துவிட வேண்டும். தேர்தலை காரணம் காட்டி தாமதம் செய்யக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்,‘‘ஆண்டுதோறும் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரிஎன 3 முறை சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில்கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும்இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.
அதைத்தொடர்ந்து நடப்பாண்டும் முதல்கட்டமாகஏப்ரல், மேமாதங்களில் குடியிருப்பு வாரியானசிறப்பு கணக்கெடுப்பு (6-18 வயது) நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும்ஆசிரியப் பயிற்சியாளர்கள், ஆர்எம்எஸ்ஏ பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன் வாடிபணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி கணக்கெடுப்பு பணியை முதன்மைகல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்கவேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog