அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 12, 2019

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த ஆண்டு மத்திய அரசு உதவியுடன் 301 அரசுப் பள்ளி களில் நவீன அறிவியல் ஆய்வகம் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக் கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1000 பள்ளிகளில் ஆய்வகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு புதிதாக தொடங்கி உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 52 ஆயி ரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த ஆண்டுஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். பள்ளிகள் மூடல் இல்லை தமிழகத்தில் 33 பள்ளிகளில் தலா ஒரு மாணவரும், 1,234 பள்ளி களில் 9 மாணவர்களுக்கும் குறைவாக படித்து வருகின்றனர். ஆனாலும் இந்த பள்ளிகளை மூடும்எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால் சிலர் தவறான கருத்து களை பரப்பி வருகின்றனர். குறைவான மாணவர்கள் உள்ள பள்ளி களில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு களுக்கும் 4 வண்ண சீருடை பள்ளி தொடங்கும் நாளில் வழங்கப்படும். மாணவர்களுக்கு வழிகாட்டி பிளஸ் 2 பாடப் புத்தகத்தில், மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி பகுதி உள்ளது. இதைப்போன்று, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள், அடுத்தது என்ன படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வதற்கும் வழிகாட்டும் பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு துறைக்கு சென்று வேலைவாய்ப்பை பெற முடியும். மாணவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு, கோடையில் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் முன்வாசலை மூடிவிட்டு, பின்வாசல் வழியாக மாணவர்களை அழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். இது குறித்து புகார் அளித்தால், அந்த பள்ளி மீதுநடவடிக்கை எடுக்கப் படும் என் ''அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி: அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, குறைந்தது, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 1 லட்சம் மாணவர்கள், கூடுதலாக சேரும் அளவுக்கு, வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்ததும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததாக, ஒரு சிறிய பள்ளி கூட மூடப்படவில்லை. ஒரே ஒரு மாணவர் உள்ள பள்ளிகளாக, 33ம், ஒன்பதுக்கு கீழ் ஒற்றை படையில், மாணவர் எண்ணிக்கை கொண்டதாக, 1,234 பள்ளிகளும் உள்ளன. எந்த காலத்திலும், அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews