
எய்ம்ஸ் எம்பிபிஎஸ் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ம் தேதி கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் நாகர்கோவில் உட்பட 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி உட்பட நாடு முழுவதும் உள்ள 15 ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (எய்ம்ஸ்) எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
www.aiimsexams.org என்ற இணையதளத்தில் அடிப்படை பதிவுகள் இதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
புதுடெல்லியில் 107, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ், நாக்பூர், மங்கலகிரி (குண்டூர்) ஆகிய 8 மையங்களிலும் 100 சீட்கள் வீதம் உள்ளன.
பத்தின்டா (பஞ்சாப்), கோரக்பூர், கல்யாணி (வங்காளம்), ரபேரலி, டியோகார்க் (ஜார்க்கண்ட்), ஹைதராபாத் அருகே பீபிநகர் (தெலுங்கானா) ஆகிய 6 மையங்களில் 50 வீதம் என்று மொத்தம் 1207 சீட்கள் உள்ளன.
எஸ்டி 7.5, எஸ்சி 15, ஓபிசி 27, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு.
இன்டேர்ன்ஷிப் உட்பட ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டும். 15 எய்ம்ஸ்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஹால்டிக்கெட் மே மாதம் 15ம் தேதி ஆன்லைனில் விநியோகம் செய்யப்படும்.
மே 25, 26 தேதிகளில் இரண்டு ஷிப்ட்கள் வாயிலாக கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.
200 அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். உயிரியல் 60, வேதியியல் 60, இயற்பியல் 60, பொது அறிவு 10, முடிவெடுக்கும் திறன்போன்றவற்றுக்கு 10 மதிப்பெண்ணும் கணக்கிடப்படும்.
தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 8 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 12ம் தேதி வெளியாகும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்