சிறு, குறு, நடுத்தர கம்பெனிக்கு கடன் வேண்டுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

சிறு, குறு, நடுத்தர கம்பெனிக்கு கடன் வேண்டுமா?


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

சமீபகாலமாக சிறு, குறு மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கிடைத்த பெரிய வரம், கொஞ்சம் தடையில்லாத மின்சாரம். இருப்பினும், அவர்களுக்கு முக்கிய பிரச்னையாக இருப்பது நடைமுறை மூலதனம். இது, வங்கிகளால் வழங்கப்பட்டாலும், பல வங்கிகள் கடன் கொடுக்க முன்வருவதில்லை. காரணம், சிலர் சரியாக கடனை திருப்பி செலுத்தாதது.ஆனால், 2016ம் ஆண்டுக்கு பின் வந்த, 'ஸ்டார்ட் அப்' அலையில், பல புதிய என்.பி.எப்.சி., (நான்-பாங்கிங் பைனான்ஸ்) கம்பெனிகள் வந்தன. இதில் பல கம்பெனிகளுடைய கவனமே, இந்த குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளாக இருந்தன.முக்கியமான கம்பெனிகளில் ஒன்று, 'கினாரா கேபிடல் (Kinara Capital)'. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டுள்ள இக்கம்பெனி, சொத்து ஜாமின் இல்லாத குறு, சிறிய மற்றும் நடுத்தர கம்பெனிகளுக்கு கடன் கொடுத்து வருகிறது.ஐந்து முதல் ஏழு நாட்களில், கடன் வழங்குவது குறித்து முடிவு எடுத்து விடுகிறது. இவர்களுக்கு, 25 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதுவரை, ஏறத்தாழ, ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளனர். வங்கிகளின் வட்டி விகிதத்தை வைத்து பார்க்கும் போது, வட்டி சிறிது அதிகமாக இருக்கிறது. ஆனால், உங்கள் தேவைக்கும், உரிய நேரத்துக்கு கடன் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருப்பதால், அத்தியாவசிய தேவைகளுக்கு வாங்கலாம். தமிழகத்திலும் பல இடங்களில் கிளைகள் வைத்துள்ளன. விபரங்களுக்கு, www.kinaracapital.com.

கைப்பக்குவம் பணக்காரராக்கும்!வீட்டிலேயே பலர் நளபாகத்தில் சிறந்தவர்களாக இருப்பர். இவர்களை இணைத்து, அவர்களுக்கு ஒரு வருமானத்துக்கு ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உண்மையானதில் உதித்தது தான் மிர்ச்சி.காம். (mirchi.com).பலர், வத்தல், வடாம், ஊறுகாய், உணவு வகைகள், இனிப்புகள் என்று தயாரித்து விற்றாலும், அது நண்பர்கள், உறவினர்கள் என்ற குறுகிய வட்டத்தையே சுற்றி வருகிறது. பெரியளவில் செல்ல இயலுவதில்லை. இதையெல்லாம் போக்கும் விதமாக, இந்த இணையதளம் இருக்கும். நீங்கள் தயாரிக்கும் பொருட்களை இங்கு காட்சிப்படுத்த லாம்.ஆன்லைன் மூலமாக விற்பனை நடக்கிறது. 300 பேர் இதுவரை இணைந்துள்ளனர். 3,000 தயாரிப்புகள் இதுவரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமையல் கலையில் சிறந்த ஆயிரம் பேர் வரை, இதில் இணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த இனிப்பு, கார வகைகள் கிடைக்கும் ஒரு இடம் இது.

சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com. மொபைல் போன்: 98204-51259. இந்தியாவின் ஏற்றுமதி உயர்வு இந்தியாவின் பொருட்கள் மற்றும் சர்வீஸஸ் ஏற்றுமதி, நடப்பாண்டு மார்ச் மாத முடிவு வரை, ஏறத்தாழ, 37 லட்சத்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் எட்டியிருக்கும். பொருட்கள் ஏற்றுமதி, 23 லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய், சர்வீஸஸ் ஏற்றுமதி, ஏறத்தாழ, 14 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும். நீண்ட ஆண்டுகளுக்கு பின், இந்தியாவின் ஏற்றுமதி அதற்கு முந்தைய வருடத்தை விட அதிகமாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில், இன்னும் கூடும் என எதிர்பார்க்கலாம். - சேதுராமன் சாத்தப்பன் -

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews