போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி செல்ல தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி செல்ல தினமும் 3 கி.மீ. நடக்கும் மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
கருங்குளம் அருகே உள்ள அரசர்குளத்துக்கு போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் தினமும் 3 கி.மீ. நடந்து செல்லும் அவலம் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகேயுள்ள அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அருகேயுள்ள ராமனுஜம்புதூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர். இருப்பினும் இவர்கள் பள்ளி செல்ல தேவையான அளவு பஸ் வசதி செய்துதரப்படவில்லை. இதனால் தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்த வண்ணம் அரசர்குளம் விலக்கு என்ற இடத்துக்கு சென்றே பஸ் ஏறிச் செல்ல வேண்டியுள்ளது. அதே முறையில் வீடு திரும்பி வருகின்றனர். இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் கூறுகையில், ‘‘தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகள் மட்டுமே அரசு பஸ் நெல்லையில் இருந்து அரசர்குளத்துக்கு வருகிறது. மற்ற வேளைகளில் கருங்குளத்தில் இருந்து பேய்குளத்துக்கு மினி பஸ் ஒருசில நேரங்களில் இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ் ராமானுஜம்புதூர் வந்து செல்வதில்லை.
இதனால் பெரும்பாலான மாணவர்கள் ராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்க 3 கி.மீ. தொலைவுக்கு நடந்துவந்து பஸ் ஏறும் அவலம் தொடர்கிறது. எனவே, பள்ளி நேரத்திலாவது நெல்லை ராமானுஜம்புதூர் பஸ்களை அரசர்குளம் வரை வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் காலை, மாலை வேளையிலாவது அரசு பஸ்களை கூடுதலாக இயக்க முன்வர வேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பு’’ என்றார். இதனிடையே ராமானுஜம்புதூருக்கு தாதன்குளம், கிளாக்குளம், வல்லகுளம், அரசர்குளம் வழியாக புதிய பஸ்கள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் கிராம மக்கள் இருந்து வருகின்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews