பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட196 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 10, 2019

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்ட196 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களுக்காக கடந்த 2017-இல் நடைபெற்ற தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 568 பேர் கலந்து கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக 2011 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 196 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள் மதிப்பீடு பணியின் போது முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரித்த தமிழக அரசு தேர்வை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தேர்வு எழுதிய சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விரிவுரையாளர் தேர்வு முறைகேடு குறித்து தமிழக அரசு ரகசிய விசாரணையை மேற்கொண்டது. அந்த விசாரணையில் 196 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என நீதிபதி தீர்ப்பளித்தார். இதே போன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த தேர்வில் 196 பேரின் மதிப்பெண்ணில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். எனவே தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சென்னை மற்றும் மதுரைக் கிளைகளில் வழங்கப்பட்ட மாறுபட்ட தீர்ப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்ற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணிநியமனம் வழங்க வேண்டும். இந்த வழக்குத் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றவர்களுக்கான நடைமுறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews