👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நோய் எதிர்ப்பு ஊக்கியாக செயல்படும் செலீனியம் நானோ துகள்களை திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.
செலீனியம், நுண்ணுாட்டச்சத்து மிக்க உலோகம். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. கோதுமை, முட்டை, வெண்ணெய், கடலை மற்றும் கடல்சார் உணவு பொருட்களில் அதிகமாக காணப்படுகிறது. இது &'ஆன்டி ஆக்சிடெண்ட்&' ஆகவும், நோய் எதிர்ப்பு ஊக்கியாகவும் செயல்படுகிறது. எ.கோலை, சூடோமோனாஸ், ஆருஜினோஸா, ஸ்டெபைலோகாக்கஸ் ஆரியஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் உதவுகிறது.மனித உடலில் சிறிதளவு செலீனியம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க பேராசிரியர் ராஜன் மேற்பார்வையில் ஆராய்ச்சி மாணவர்கள் ஆனந்த், கீர்த்திகா ஆகியோர் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர்.
சோடியம் செலீனைட்டையும், வைட்டமின் &'சி&'யையும் (அஸ்கார்பிக் அமிலம்) இணைத்து முதன் முறையாக &'செலீனியம் நானோ துகள்&'களை உருவாக்கியுள்ளனர்.அவர்கள் கூறியது:&'நானோ&' துகள்கள் நிறம், அளவு ஆகியவற்றை பொறுத்து வேறுபடுகின்றன. அதன் அணு நிறைகள், அளவை பொறுத்து அதிவேகமாக சுழலும் சென்ட்ரிபியூக்கள் கருவி மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த &'செலீனியம் நானோ&' துகள்கள் கோள வடிவமாகவும், 15 முதல் 18 &'நானோ&' மீட்டர் அளவிலும் இருக்கும்.தற்போது &'செலீனியம் நானோ&' துகள்களை மீனின் உடலில் செலுத்தி அதன் உடலில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்ந்து வருகிறோம், என்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்