Breaking

Wednesday, February 13, 2019

ஏழாம் வகுப்பு பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம்பெறும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
ஏழாம் வகுப்பு பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம்பெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி கூறினார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசியது: ஏழாம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய பாடம் இடம்பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி கூறியிருந்தார்.
ஆனால், பாடத்தில் முத்துராமலிங்கம் என்று மட்டும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. சர்தார் வல்லபபாய் பட்டேல், பிரணாப் முகர்ஜி போல முத்துராமலிங்கத் தேவர் என்று பெயர் இடம்பெற வேண்டும். சட்டப்பேரவையில் கையெழுத்திடும்போது முத்துராமலிங்கத் தேவர் என்றே அவர் கையெழுத்திட்டுள்ளார். அதனால், அதை அப்படியே இடம்பெற செய்ய வேண்டும் என்றார். அதற்கு, அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, ஏழாம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்கத் தேவர் என்றே பெயர் இடம் பெறும் என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog