லோக்சபா தேர்தல் பணிகளில் மட்டுமல்ல, திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்வதிலும், மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டுக்கான, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 1ல் துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 1 தேர்வு, மார்ச் 6ல் துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29 வரை நடக்க உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 78 தேர்வு மையங்களில், 211 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள், 11 ஆயிரத்து, 082; மாணவியர், 13 ஆயிரத்து, 505; தனித்தேர்வர்கள், 177 என, 24 ஆயிரத்து, 764 பேர் தேர்வு எழுத உள்ளனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, 78 தேர்வு மையங்களில், 203 மேல்நிலைப்பள்ளி களை சேர்ந்த, 25 ஆயிரத்து, 723 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இதில், 371 தனித்தேர்வர் அடக்கம்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 92 மையங்களில் நடக்கிறது; 348 பள்ளி மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
15 ஆயிரத்து, 204 மாணவர்கள்; 15 ஆயிரத்து, 267 மாணவிகள்; தனித்தேர்வர்கள், 957 பேர் என, 31 ஆயிரத்து, 428 பேர் தேர்வு எழுத உள்ளனர்.கூட்டத்தில், பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் பழனிசாமிபேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், 25 ஆயிரத்து, 723 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்; 24 ஆயிரத்து, 764 பேர், பிளஸ் 1 தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வை, 31,428 பேர் எழுத உள்ளனர். பொதுத்தேர்வுகளுக்காக, மாவட்டத்தில், ஆறு இடங்களில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் பராமரிக்கப்படுகிறது.
மேல்நிலை தேர்வு மையங்களில், 78 தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக, 89 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக, 1,621 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்புபத்தாம் வகுப்பு தேர்வு மையங்களில் பணியாற்ற, 92 தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். துறை கண்காணிப்பாளராக, 98 ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக, 1,683 ஆசிரியர்களும் செய்யப்பட்டுள்ளனர்.பறக்கும் படை உஷார்தேர்வுகளில், முறைகேடு செய்தல், காப்பி அடித்தல், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்வி அலுவலர்கள் அடங்கிய தனித்தனி பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
&'ஒழுங்கீனம் கூடாது&'பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு நடத்தி, ஒழுங்கீனத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேல்நிலை பொதுத்தேர்வுக்கு, 150 ஆசிரியர்களும், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, 200 ஆசிரியர்களும் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இணை இயக்குனர் தலைமையிலும் பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது.ஆலோசனை பெட்டிபறக்கும் படையினர், தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய, தேர்வு மையங்களில் பதிவேடு வைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும், ஆலோசனை பெட்டி வைக்கப்படும். பொதுத்தேர்வு நாட்களில், பஸ் பாஸ் இல்லாத மாணவ, மாணவியர்களும், பள்ளி சீருடையில், பஸ்சில் சென்றுவர, போக்குவரத்துதுறை அனுமதிக்க வேண்டும்.தனித்தேர்வு மையங்களில், மாணவ, மாணவியருக்கு, போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
பொதுத்தேர்வை சந்திக்க உள்ள மாணவர்கள், மன அமைதியுடனும், தைரியத்துடனும் படித்து, தேர்வெழுத வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார். முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள், மாநகராட்சி, மின்வாரியம் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்