👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, சட்டப் பல்கலை பொறுப்பு பதிவாளர், வரும், ௧௮ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையின் பதிவாளராக நியமிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பேராசிரியர் சங்கர் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணையில் உள்ளது. சட்டக் கல்லுாரி பேராசிரியர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்யும்படி, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு, முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி தாக்கல் செய்த மனுவில், &'சட்டக் கல்லுாரிகளில் பணியாற்றுபவர்களில், ௨௭ பேராசிரியர்களுக்கு, தகுதி இல்லை&' என, கூறப்பட்டது.இதையடுத்து, சட்டப் பல்கலை துணைவேந்தர் மற்றும் உதவி பேராசிரியர்கள், ௩௨ பேரை, வழக்கில் சேர்த்து, அவர்களின் பணி நியமனம், யு.ஜி.சி., நிர்ணயித்தபடியான கல்வித்தகுதி போன்ற விபரங்களை, மனுவாக தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தில், சட்டப் பல்கலை சார்பில், அதன் பொறுப்பு பதிவாளர், 0ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
அதில், &'ரிட் வழக்கில் எழுப்பப்பட்ட விஷயங்களை மீறி, தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து, விருப்பம் போல தனி நீதிபதி செயல்படுகிறார்&' என, கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள், சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்த போது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:பதிவாளர் பொறுப்பில் இருக்கும், பல்கலை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக, இவ்வாறு கூறியிருப்பது உகந்தது அல்ல. வழக்கின் வரம்பை விரிவுபடுத்துவதால், அந்த நீதிபதிக்கு எதிராக, தேவையற்ற விமர்சனங்களை வைக்க, வழக்கு தொடுப்பவருக்கு உரிமை இல்லை.
தேவையற்ற கருத்துகளை கூறுவது, நீதிபதியை அவமரியாதை செய்வது மட்டும் அல்லாமல், உயர் நீதிமன்ற மாண்பை குறைப்பது போன்றது. நீதிமன்றத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். அதற்கு, எந்த சேதாரமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை, சம்பந்தப்பட்டோருக்கு உள்ளது.பொறுப்பு பதிவாளர் பயன்படுத்திய வார்த்தை, அளவுக்கு மீறியது. எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு, பொறுப்பு பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அதற்காக, ௧௮ம் தேதி, பொறுப்பு பதிவாளர் ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி, நீதிமன்றத்தில் ஆஜராக, &'நோட்டீஸ்&' அனுப்ப வேண்டும்.நோட்டீசை, பொறுப்பு பதிவாளரிடம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க வேண்டும். அதற்கான அத்தாட்சியை, ௧௫ம் தேதி, நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்