👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள் வழியே பயிற்சி அளிக்கும்படி, இன்ஜி., கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுரை வழங்கியுள்ளது.இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பல்கலை பாடத் திட்டத்துக்கான புத்தகங்களை, அந்தந்த பல்கலைகள், பேராசிரியர்கள் சார்பில், பரிந்துரை செய்யப்படுகின்றன.
இவை, பெரும்பாலும், வெளிநாட்டு ஆசிரியர்களின் புத்தகங்களாக உள்ளன.இந்த புத்தகங்களை படிக்கும் மாணவர்கள், இந்திய தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை தொழில்நுட்ப பயிற்சிகளை பெற முடியாமல், வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.எனவே, மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்பத்துடன், இந்தியதொழில் துறை மற்றும் அடிப்படை தொழில்நுட்பங்களை இணைந்து கற்கும் வகையில், புதிய புத்தகங்களை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தேர்வு செய்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை, இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்கள். இந்த புத்தகங்களின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிட்டு உள்ளது. இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை பயன்படுத்தி, மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கும்படி, கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்