👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648

பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. சென்னையில் 37 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது.
இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 20 லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கண்ட வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் தற்போது நடக்கிறது. இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது.
இந்த செய்முறைத் தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவியர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டுகட்டமாக செய்முறைத் தேர்வுகள் நடக்க உள்ளன.
முதற்கட்ட தேர்வில் 149 பள்ளிகளிலும் இரண்டாம் கட்ட தேர்வில் 157 பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு நடக்கிறது.
சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொத்தம் 47 ஆயிரத்து 305 பேர் படிக்கின்றனர். அவர்களில் 37 ஆயிரத்து 299 பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்குகிறது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஏற்கனவே, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு இல்லாமல் இருந்ததால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிளஸ் 1 பாடங்களை நடத்தாமல் தவிர்த்தன. இந்த பிரச்னையை போக்கும் வகையில், 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொதுத் தேர்வுத் அறிமுகம் செய்யப்பட்டது.நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 6ல் துவங்குகிறது. இதில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை துவங்க உள்ளது.இதற்காக, மாநிலம் முழுவதும், கல்வி மாவட்ட வாரியாக, முக்கிய பள்ளிகளில், செய்முறை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிற பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலை ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்வை பெயரளவிற்கு நடத்தாமல், மாணவர்கள், ஆய்வகம் மற்றும் ஆய்வக பொருட்கள் குறித்த தகவல்களை அறியும் வகையில், முறைகேடின்றி நடத்த வேண்டும் என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டுள்ளன. நாளை முதல், வரும், 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்