👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழக மக்களின் நலனுக்காக முன் வைக்கப்பட்ட10 கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அதிமுக கூட்டணியில் பாமக இறுதி செய்யப்பட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பாமக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும், ஒரு ராஜ்யசபா சீட்டும் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, வரும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் இணைவதற்காக,மக்கள் நலனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.
அந்த 10 கோரிக்கைகள்:
* காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலங்களாக அறிவித்தல்.
* கோதாவரி - காவிரி பாசனத்திட்டம் மற்றும் 20 பாசன திட்டங்களை நிறைவேற்றுதல்.தமிழகத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
* 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.
* படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
* மணல்குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல்.
* மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.
* பொதுத்துறை , கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
* நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்