👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் புதிய வங்கி சேவை பயன்பாட்டிற்கென அலைபேசி செயலியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்கள் இதை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க இந்திய தபால் துறை சார்பில் 'இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்' என்னும் வங்கி சேவை புதிதாக துவங்கப்பட்டது. இவ்வங்கியில் சேமிப்பு, நடப்பு மற்றும் வைப்பு கணக்கை துவங்கலாம். குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை டிபாசிட் செய்யலாம். பண பரிமாற்றங்களுக்கு, தபால் துறை வங்கியில் பணம் எடுக்க எவ்வித கட்டணமும் கிடையாது. கடன் மற்றும் கிரெடிட் கார்டு கிடையாது. பொதுத்துறை வங்கிகளில் அளிக்கப்படும் மற்ற சேவைகள் வழங்கப்படும். பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களும், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் அந்த வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்யலாம். புதிதாக கணக்கு துவங்க ஆதார் கார்டு எண் மட்டும் போதும்.
ஐ.பி.பி.பி. வங்கி செயலி: தபால் துறை'ஐ.பி.பி.பி.,' எனும் அலைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியில் அஞ்சலக சேமிப்பு கணக்கின் வரவு செலவுகளை பார்க்கலாம். பிற வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்ய முடியும்.
மின்சாரம், அலைபேசி, தொலைபேசி, இன்டர்நெட் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தலாம். மேலும் இதை பயன்படுத்தி ஆதார், பேன் எண்ணை இணைத்தல், வாரிசு, முகவரி மற்றும் இமெயில் மாற்றமும் செய்யலாம். போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி உதவும் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்