android mobile users eye care apps: பாதுகாக்கும் ஆப் (App)கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 09, 2019

android mobile users eye care apps: பாதுகாக்கும் ஆப் (App)கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஆண்ட்ராய்ட் ஃபோன்கள் தவழாத கைகள் கிடையாது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி பெண்கள் வரை எல்லோரும் ஃபோனும் கையுமாக தான் வலம் வருகிறார்கள். சாலையை கடக்கும் போது மட்டும் இல்லை, பஸ்சில் பயணம் செய்யும் போது கூட ஃபன்களை பயன்படுத்தாமல் இருப்பதில்லை.
கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி இவர்கள் ஃபோனோடு தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். தொழில்நுட்பம் வளர்வது வரப்பிரசாதமாக இருந்தாலும். அதிலும் சில ஆபத்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு. இவர்கள் சந்திக்கும் பல பிரச்னைக்கு ஃபோன் தான் முக்கிய காரணமாக உள்ளது. வாட்ஸ்சப், பேஸ்புக், டிக்டாக் மட்டுமே உலகமில்லை. அதையும் தாண்டி இந்த ஃபோனில் பல நல்ல விஷயங்களும் உள்ளன. அதை நாம் தெரிந்து கொள்வதில்லை. முக்கியமாக ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் உள்ள ஆப்கள் (App). இதில் பெண்களுக்கான சில சேஃப்டி ஆப்களும் உள்ளன. அது பற்றிய சிறிய தொகுப்பு.
My SafetiPin நீங்கள் பாதுகாப்பற்ற இடத்தில் சிக்கிக் கொண்டாலோ அல்லது இடம் மாறி போய்விட்டாலோ இந்த ஆப் உங்களுக்கு சிக்னலை கொடுக்கும். இந்த ஆப் உங்க ஃபோனுடைய பேக்கிரவுண்டில் ஓடிக் கொண்டு இருக்கும் வரை நீங்கள் பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறீர்களா என்று கண்காணித்துக் கொண்டு இருக்கும். ஒரு வேளை தவறான இடத்துக்கு போய்விட்டால், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு இது குறித்து செய்தி அனுப்ப சொல்லி எச்சரிக்கும். அது மட்டுமில்லை மாற்றுவழியையும் காண்பிக்கும். உடனே கூகில் வரைபடங்களுக்குள் சென்றுவிடுவதால், நீங்கள் பாதுகாப்பான இலக்கை அடையலாம்.
SafetiPin இரவில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த முதன்மை தகவல்களை சேகரிக்கிறது. * அங்குள்ள வெளிச்சம் * கூட்டம் அதிகம் உள்ள பகுதியா? * பொது போக்குவரத்து அருகில் உள்ளதா? * நடக்க சரியான இடம் இருக்கிறதா? * அருகில் காவல் நிலையம் உள்ளதா? * உங்களால் சுற்றிப்பார்க்க முடியுமா? இது போன்ற பல செய்திகளை சேகரிக்கும். அதற்கு ஜி.பி.எஸ் டிராக்கிங்கைப் பயன்படுத்துகிறது.
The KAVALAN SOS தமிழக காவல்துறையின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஆப் தான் இது. மக்கள் அவசரகாலத்தில் உடனடியாக காவல் துறையின் உதவியை நாட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஈவ் டீசிங், கடத்தல் அல்லது இயற்கை பேரழிவுகள்... வெள்ளம், பூகம்பம் என எந்த காலங்களிலும் பயன்படுத்தலாம். பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக நினைத்த அடுத்த நிமிடம் போலீசின் உதவியை இதன் மூலம் நாடினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை பேரழிவுகள் போன்ற அவசர காலங்களில் மக்கள் உடனடியாக இந்த சேவை மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஃபோன்களில் இன்ஸ்டால் செய்யலாம். அதன் பிறகு அது உங்களின் கைபேசி எண், வீட்டு முகவரி, மாற்று ஃபோன் எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் போன்ற விவரங்களை கொண்டு பதிவு செய்யணும். நீங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நெருக்கமான நண்பர் மற்றும் உறவினரின் விவரங்களையும் கொடுக்கவும். அதன் பிறகு உங்களுக்கு வரும் குறியீட்டை கொண்டு இந்த ஆப்பினை செயல்படுத்த துவங்கலாம்.
சிக்கலான நேரத்தில் இந்த ஆப்பினை ஐந்து வினாடி தொடர்ந்து அழுத்திக் கொண்டு இருந்தால், நீங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் மற்றும் உங்கள் கேமராவில் வீடியோ இயங்க ஆரம்பிக்கும். ஒரே நிமிடத்தில் காவல்நிலையத்தில் இருந்து தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் நீங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும் எண்களுக்கும் உங்களின் இருப்பிடம் குறித்த SMS சென்றுவிடும். Shake2Safety - Personal Safety Shake2Safety அவசரகாலத்தில் நீங்கள் இருக்கும் இடம் மற்றும் சுற்றியுள்ள ஆடியோவை பதிவு செய்து உங்களின் நண்பர்களுக்கு செய்தி அனுப்பும். இதற்கு உங்கள் மொபைலை ஆட்டலாம், அல்லது மொபைலின் பவர் பட்டனை நான்கு முறை அழுத்தலாம். அவசரகால எண்கள் என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் அனைத்து எண்களுக்கும் உங்களின் இருப்பிடம் குறித்த செய்தி, இருக்கும் இடத்தின் புகைப்படம் மற்றும் நான்கு வினாடிக்கு ஒரு முறை பதிவு செய்யப்படும் ஆடியோ அனுப்பப்படும். இந்த ஆப் இயங்க இணையம் இணைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் உங்க ஃபோனின் திரை லாக் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த ஆப் தன் வேலையை சத்தமில்லாமல் செய்யும்.
Women Safety நீங்கள் பாதுகாப்பற்ற இடத்தில் இருக்கும் போது, அது குறித்த தகவல்களை உடனடியாக உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் ஆப் தான் Women Safety app. ஒரு பட்டனை தட்டினால் போதும், நீங்கள் இருக்கும் இடத்தை கூகுள் மேப்புடன் இணைத்து நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் கைபேசி எண்ணுக்கு SMS அனுப்பும். அது மட்டும் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்தை முன்புறம் மற்றும் பின்புறம் இருக்கும் கேமராவில் படம் பிடிக்கும். மேலும் உங்களை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை ஆடியோ மற்றும் வீடியோவாக எடுத்து எங்களின் சர்வருக்கு அனுப்பிடும். இதில் மூன்று நிற பட்டன்கள் உள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப இதனை பயன்படுத்தலாம். அதாவது ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய பச்சை பட்டன். எச்சரிக்கையாக இருக்க ஆரஞ்ச் பட்டன். ஆபத்தை தெரிவிக்க சிவப்பு பட்டன்.
Stay Safe-A Women Safety Application ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயன்படுத்தப்படும் பெண்களுக்கான பாதுகாப்பு ஆப்களில் இதுவும் ஒன்று. இந்த ஆப்பில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் எண்களுக்கு உங்களின் இருப்பிடம் குறித்த செய்தி அனுப்பப்படும். இது நீங்கள் இருக்கும் இடம் மற்றும் கடைசியாக தொடர்பு கொண்ட நபரின் விவரங்களையும் சேகரித்து வெப் சர்வர் தளத்தில் பதிவு செய்யும். இது அவசர நிலையில் தேவைப்படும் பாதுகாப்பு குறிப்புகளும் அவ்வப்போது வழங்கும். அதில் முதல் உதவி குறிப்புகள் சார்ந்த விவரங்களும் இருக்கும். விபத்தோ அல்லது அவசர காலத்தில் அருகில் இருக்கும் மருத்துவமனை, காவல் நிலையங்கள், மருந்தகம் அல்லது ஆம்புலன்ஸ் சேவை குறித்த தகவல்களை இந்த ஆப் மூலம் தேடலாம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews