Breaking

Thursday, November 22, 2018

பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவ., 22, 23ல் சான்று சரிபார்ப்பு

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நவ., 22, 23ல் நடக்கிறது இதுகுறித்து, சேலம், முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, அரசு பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை
சேலம் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும், தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, நவ., 22, 23ல், மரவனேரி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடக்கவுள்ளது. மாவட்டத்துக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், உரிய ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் 10ம் வகுப்பு, பிளஸ் 2, தொழில்கல்வி, ஆசிரியர் படிப்பு, ஜாதிச்சான்று, மாற்றுத்திறனாளி சான்று, பணிநியமன கடிதம் உள்ளிட்ட அசல் சான்றுகள், நகல்களுடன் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது பணி நிரந்தரம் செய்யக்கோரி, போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் மீது, பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், தற்போது திடீரென சான்றிதழ் சரிபார்ப்பது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog