மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இடி - மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? முழு விவரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 05, 2018

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: இடி - மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? முழு விவரம்



☔ *தற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...*
☔ *மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே*
🗣 *நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்*
🗣 *மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்*
🗣 *செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்*
🗣 *பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்*
🗣 *இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்*
🗣 *பிஸ்கட்*
🗣 *பால்*
🗣 *அவசர மாத்திரைகள்*
🗣 *தண்ணீர் கேன்*
🗣 *பேட்டரி செல்கள்*
🗣 *மெழுகுவர்த்தி*
🗣 *காய்கறிகள்*
🗣
மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்*
🗣 குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்*
🗣 *குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்*
🗣 *கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்*
🗣 *இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்*
🗣 *பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்*
🗣 *மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்*
🗣 *மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை*


தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 8 வரை பரவலாக மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
அக்டோபர் 8-ம் தேதி தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எண்ணூரில் 13 செ.மீ. மழை
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை எண்ணூரில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 45 நாட்களுக்கு மழை, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

Total Pageviews