ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்.
முதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை.
பிறகுதான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.
அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது.
இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள்.
அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.
சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே.
August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது. மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்..
அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது. I was in an august company என்றோ It was an august performance என்றோ குறிப்பிடலாம்.
வேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
மாறாக march என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.
மேற்கூறியவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட வார்த்தைகள் (august, march ஆகியவை) வாக்கியத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றால் என்ன செய்வது என்கிறீர்களா? (வாக்கியத் தொடக்க எழுத்து capital letterல்தானே எழுதப்பட வேண்டும்!) அப்படி இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். நான் கூட அதனால்தான் ‘மாறாக’ என்ற வார்த்தையை இடம்பெறச் செய்திருக்கிறேன்.
சில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும்.
பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள்.
அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து.
பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.
Church என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.
Liberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.
Cancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா?) Titanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள்.
இந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
A turkey may march in Turkey in May or March!
(Turkey என்பது துருக்கி நாட்டையும் turkey என்பது வான்கோழியையும் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?)
VERBATIM
Verb என்பதற்கும் verbatim என்பதற்கும் என்ன தொடர்பு என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். தொடர்பு உண்டு யார் சொன்னது?
Verbatim என்ற வார்த்தையைக் கொஞ்சம் விரிவாகவே விளக்கினால் தெளிவாகப் புரியும்.
அப்பாவும் மகனும் ஒரு கண்காட்சிக்குப் போனார்கள். அங்கே நயாகரா பற்றி ஒரு குறும்படம் காட்டப்பட்டது. வீட்டுக்கு வந்ததும் அப்பா தன் மனைவியிடம் இப்படிக் கூறினார். அந்தக் குறும்படத்தின் தொடக்கத்திலே ஒரு ஸ்லைடு போட்டாங்க கீதா. நயாகரா பத்தி இப்படித் தொடங்கினாங்க. “அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே..’’.
அப்பா இப்படி ஆரம்பித்தவுடனேயே மகன் குறுக்கிட்டான். “தப்பா சொல்றீங்க அப்பா. ‘அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே’ கிடையாது. ‘கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே’ன்னுதான் சொன்னாங்க’’ என்று திருத்தினான். .
அப்பா ஒப்புக்கொண்டு தன் வாக்கியத்தை மாற்றிச் சொன்னார்.
“கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நீர்வீழ்ச்சி ..’’. இப்படித் தொடரும்போது “தப்பு தப்பு’’ என்று குறுக்கிட்டான் மகன். “நீர்வீழ்ச்சின்னு அவங்க சொல்லலை. அருவின்னுதான் சொன்னாங்க’’ என்றான்.
அந்த மகன் சரியான Verbatim-காரன்! அதாவது ஒருவர் சொன்னதை “வார்த்தைக்கு வார்த்தை அச்சுப்பிசகாமல்’’ சொல்வதோ எழுதுவதோதான் VERBATIM.
REFUSE REFUTE REBUT
Refuse என்றால் மறுப்பது. He refused the invitation. I refuse to accept your view.
Refute என்பதை ஆதாரத்துடன் மறுப்பது என்கிற அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். The testimony of the witness was refuted.
Rebut என்றால் விவாதம் செய்து ஒன்றை மறுப்பது.
Examples of pairs of capitonyms are:
Turkey (the country) and turkey (the bird)
China (the country) and china (as in porcelain).
Search This Blog
Saturday, September 29, 2018
Comments:0
Capitonym பற்றி தெரியுமா உங்களுக்கு? Augustக்கும் augustக்கும் உள்ள வேறுபாடு என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.