பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் :
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
பழமொழி :
A cat may look at a king
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
பொன்மொழி:
ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர். - அரிஸ்டாட்டில்.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? லீவைஸ்ட்ராஸ், 1848
2.காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது? கர்நாடகா
நீதிக்கதை :
தந்திர நரி (Sly Fox) திருக்குறள் நீதிக் கதைகள் (Thirukural Moral Story)
ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.
இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது. தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.
நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது. என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.
இன்றைய செய்தி துளிகள் : 02.07.2018
1. அரசு பள்ளி மாணவர்களுக்கு லண்டன் பேராசிரியர்கள் மூலம் இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு!
2.திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக்பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' - முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார்
3.தமிழக சட்டசபை நடப்பு கூட்டத் தொடரில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல்?: உச்ச நீதிமன்ற கெடுவையடுத்து நடவடிக்கை
4.நம் நாட்டில் பேசப்படும் தாய்மொழிகளின் எண்ணிக்கை 19,569 : ஆய்வில் தகவல்
5. ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க 2019, மார்ச் 31 வரை அவகாசம்
6.போராடி தோற்றது அர்ஜென்டினா : கால் இறுதியில் பிரான்ஸ்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.