அரசுப் பள்ளிகளில் சுயசிந்தனையை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கற்பிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்கம், கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்களை அவர் இன்று திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, நாட்டிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாகக் கூறினார். கல்வித்துறை முன்னேற்றம் காண அதிமுக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் அதிக பள்ளிகள் திறக்கப் பட்டிருப்பதால் குற்றங்கள் குறைந்து, மாநிலமே அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் முதலமைச்சர் கூறினார்
Search This Blog
Sunday, July 01, 2018
Comments:0
Home
INFORMATION
STUDENTS
TEACHERS
அரசுப் பள்ளிகளில் சுயசிந்தனையை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் - முதலமைச்சர் பழனிசாமி
அரசுப் பள்ளிகளில் சுயசிந்தனையை வளர்க்கும் வகையிலான பாடத்திட்டங்கள் - முதலமைச்சர் பழனிசாமி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.