ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதா? திமுக - அதிமுக விவாதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 05, 2018

Comments:0

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதா? திமுக - அதிமுக விவாதம்


ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதா என்பது குறித்து திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது.

ஆதி திராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தாயகம் கவி பேசியது:

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் 1,136 உள்ளன. இதில் தொடக்கப் பள்ளிகள் 836. நடுநிலைப் பள்ளிகள் 96. உயர்நிலைப் பள்ளிகள் 117. மேல் நிலைப் பள்ளிகள் 87 ஆகும். இந்தப் பள்ளிகளில் 2016-17-ஆம் ஆண்டில் 1,15,730 மாணவர்கள் படித்தனர். இது 2017-18-ஆம் ஆண்டில் 1,06,390-ஆகக் குறைந்து விட்டது. 2018-19-இல் 92, 246-ஆகக் குறைந்துள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் அல்லாமல் அவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துவிட்டது என்று அது தொடர்பான புள்ளிவிவரத்தையும் கூறினார்.

அமைச்சர் ராஜலட்சுமி (குறுக்கிட்டு): ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதமும் குறையவில்லை. தேர்ச்சி விகிதமும் குறையவில்லை. அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களின் பொருளாதாரம் பெருகிவிட்டதால் நகர்ப்புறங்களுக்குச் சென்று, நல்ல பள்ளிகளில் படிக்கின்றனர் என்றார்.
Kaninikkalvi.blogspot.com 
அமைச்சர் செங்கோட்டையன்: ஆதிதிராவிடர் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 25 சதவீதம் பேர், அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதனால் மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

அமைச்சர் அன்பழகன்: உயர் கல்வியில் சேரும் ஆதிதிராவிட மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட 38.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை குறைந்துவிட்டது என்று கூற முடியாது.

தாயகம் கவி: ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பது குறித்துக் கேட்டதற்கு, அவர்கள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து விட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆதிதிராவிடர்கள் பள்ளிகள் சிறப்பாக இல்லை என்று அமைச்சர் ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு நன்றி.

அமைச்சர் ராஜலட்சுமி: நல்ல பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று நான் கூறவில்லை. நகரப் பள்ளிகளுக்குச் செல்கிறார் என்றே கூறினேன்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews