மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அரசு உறுதி அளிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் பேரவை குழுத் தலைவர் ராமசாமி அது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அளித்த பதில்:
தமிழகத்தைத் தாண்டி பல்வேறு இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே பல்வேறு நபர்களின் பெயர்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதே போன்று, காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெகுவிரைவில் முன்னாள் முதல்வர் காமராஜர் பெயரில் ஆரம்பக் கல்வி சார்ந்த இருக்கை அமைக்கப்படும்.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமாரும் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.