அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, பண்ணப்பட்டி அரசு பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,745 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், அரசு சார்பில், வெளிநாட்டில் கல்வி பயணம் மேற்கொள்ள, ஒன்பதாம் வகுப்பு மாணவர் மேகநாதன். சேலம் கோட்டை அரசு மகளிர் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி ராகவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக, தானியங்கி வேகத்தடை கட்டுப்பாட்டு கருவியை, மாணவர் மேகநாதன் கண்டுபிடித்துள்ளார். ஆம்புலன்ஸ் வேகமாக வரும் போது, வேகத்தடை, தானாக, சமமான சாலையாக மாறி விடும். பின், மீண்டும், வேகத்தடையாக மாறிவிடும்.போக்குவரத்து சிக்னலும், பச்சை விளக்குக்கு மாறி, மற்ற சிக்னல்கள் சிவப்பு விளக்குக்கு மாறிவிடும். மேலும், செல்லக்கூடிய மருத்துவமனைக்கு, முன்னதாகவே அலாரம் அடிக்கக்கூடிய வகையில் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி உள்ளார்.பண்ணப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ''பல்வேறு அறிவியல் கண் காட்சியில், மேகநாதன் வெற்றி பெற்றுஉள்ளார். ''சேலம் மாவட்டம், பெருமை கொள்ளும் வகையில், அவர் வெளிநாடு செல்ல தேர்வு பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.மாணவர், எந்த நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
Search This Blog
Tuesday, July 24, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.