மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் 20.07.2018ல் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில தலைமை நிர்வாகி ம.அருளப்பன் தலைமையில் வெ.பழனிவேல் மற்றும் பா.தர்மராஜ் முன்னிலையில் பி.ஷேக்அப்துல்லா, பா.வீரமணிகண்டன், எ.மதிராஜா, எம்.தர்மாராஜ், கே.அம்பிகா, ஆர்.நித்யா, ஆர்.செந்தில்குமாரி, த.அனுசியா, எம்.அனு, சு.மகேஸ்வரி, எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மேதகு தமிழக ஆளுநர் அவர்களை சந்தித்து சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 141ன்படி சமவேலை சமஊதியம் மற்றும் சமீபத்தில் தமிழக அரசு பணிநிரந்தரம் அறிவித்துள்ள ஒப்பந்த செவிலியர்கள், தொகுப்பூதிய கல்லூரி விரிவுரையாளர்களைப் போல 2012ல் நியமனம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக நியமித்து பணிநிரந்தரம் செய்யக் கோரப்பட்டது. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை விவரங்களை எம்.ஏ,அப்ரோஸ் ஆசிரியை அவர்கள் ஹிந்தியில் மொழிபெயர்த்து மேதகு ஆளுநர் அவர்களிடம் எடுத்துரைத்து உதவினார். மேதகு ஆளுநர் அவர்கள் உடனடியாக IAS அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி செயலருக்கு பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.செந்தில்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.