போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியமில்லை! ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூலை 23) போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டைக் களைதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியை சேர்ந்த ஆசிரியர்கள், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் தொடங்கிய இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, அருகிலுள்ள திருமண மண்டபங்களில் அவர்களைத் தங்கவைத்தனர்.
Official News - Click Here
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள் கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு 'வேலை செய்யாதவர்களுக்கு ஊதியமில்லை' என்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியத்தை நிறுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.