திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை நேற்று முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர். செங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆய்வின்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இயற்பியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சிகள் அளிக்காதது தெரியவந்தது. அதேபோல், பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள 2.50 லட்சம் மதிப்பிலான கருவிகளை பயன்படுத்தி ‘ஸ்மார்ட் கிளாஸ்’ நடத்தாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இயற்பியல் பாட முதுகலை ஆசிரியர் முகமது மைனுதீனை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, கட்டாயம் செய்முறை வகுப்புகளை நடத்தவும், அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்
Search This Blog
Wednesday, July 25, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.