மறுமதிப்பீடுக்குவிண்ணப்பித்த 50 சதவிகித சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிபிஎஸ்இ மாணவர்கள் பலர் மறுமதிப்பீடுக்கு விண்ணபித்திருந்தனர். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்தபத்தாம் மற்றும் 12ஆம்வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 5 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் மே மதம் 26 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் சில சிபிஎஸ்இ மாணவர்கள் மறுமதிப்பீடுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதுதொடர்பாகமறுமதிப்பீடுக்கு விண்ணபித்த 12 வகுப்பு மாணவிடைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ‘என் பெயர் இஸ்ரிதா. நான் எல்லாபாடங்களிலும் 95மதிப்பெண்களை எடுத்திருந்தேன். ஆனால் பொலிடிக்கல் சைன்ஸ் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தேன். மறுமதீப்பீடு செய்த பிறகு 22மதிப்பெண்கள் அதிகரித்து உள்ளது என்று கூறினார்.
சுமார் 9,111 மாணவர்கள் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருந்தனர். இதில் 4,632 பேருக்கு அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது.kaninikkalvi.
தவறாக விடைதாளை திருத்திய 214 ஆசிரியர்கள் மீது சிபிஎஸ் இநடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அங்குராக் த்ருபதி கூறுகையில்’ விடைத்தாள் திருத்துவதில் 99.6 சதவிகிதம் தவறு நடக்கவில்லை 0.4 சதவிகிதம் தவறுதான் நடந்துள்ளது. இதுவும் கூட விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மீது அதிக அழுத்தம் இருந்ததால் மட்டுமே நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.