'அனைவரும் தேர்ச்சி' திட்டத்தை, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் ரத்து செய்யும் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின்படி, 1 முதல், 8ம் வகுப்பு வரையுள்ள மாணவ - மாணவியர், 'பெயில்' ஆக்கப்படாமல், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவர். இது, 'அனைவரும் தேர்ச்சி' திட்டம் என்றழைக்கப்படுகிறது.இந்நிலையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் தாக்கல் செய்து பேசியதாவது:பள்ளிகளில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு, அனைவரும் தேர்ச்சி திட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஆண்டு இறுதி தேர்வில் தோல்வியடைந்த, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்கு பின், மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வில் தோல்வியடையும் மாணவர்களை, மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.
தோல்வி அடைந்த மாணவர்கள், பள்ளியை விட்டு நீக்கப்பட மாட்டார்கள்.இருப்பினும், அனைவரும் தேர்ச்சி திட்டத்தை பின்பற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து, மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம். அதுபோல, தோல்வி யடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்தும் மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மட்டும் மத்திய அரசு அளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர், மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.
x
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.