ஜூன் 13 (June 13) கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர். 1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது. 1886 – பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான். 1917 – முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர். 1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர். 1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின. 1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது. 1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. 1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1978 – இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர். 1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான். 1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.
2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது. 2007 – திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.
பிறப்புகள்
1831 – ஜேம்சு மக்சுவெல், இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1879) 1865] – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (இ. 1939) 1870 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (இ. 1961) 1905 – ஜேம்ஸ் இரத்தினம், இலங்கை வரலாற்றாளர் (இ. 1988) 1909 – நம்பூதிரிபாது, 1வது கேரள முதலமைச்சர் (இ. 1998) 1928 – ஜான் நாசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2015) 1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996) 1935 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர் (இ. 2009) 1944 – பான் கி மூன், 8வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் 1946 – பவுல் மோட்ரிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர் 1959 – கிளாசு யோகன்னிசு, உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர் 1966 – கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலாளர் 1981 – கிறிஸ் எவன்ஸ், அமெரிக்க நடிகர் 1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
1231 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195) 1931 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர் (பி. 1851)
1969 – பிரகலாத் கேசவ் அத்ரே, இந்திய ஊடகவியலாளர், இயக்குநர் (பி. 1898) 2012 – மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர் (பி. 1927)
சிறப்பு நாள்
கண்டுபிடிப்பாளர் நாள் (அங்கேரி) மாவீரர் நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.