தமிழகத்தில் பல ஆண்டுகளாக மாற்றப்படாத எஸ்.எஸ்.ஏ(SSA) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்: முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 17, 2018

Comments:0

தமிழகத்தில் பல ஆண்டுகளாக மாற்றப்படாத எஸ்.எஸ்.ஏ(SSA) மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்: முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டு


தமிழகத்தில் எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இடமாறுதல் செய்யப்படாமல் இருப்பதால், முறைகேடுகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் சார்பில், 401 வட்டார வள மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 4,500க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பயிற்றுநர்களாக உள்ளனர். அந்தந்த வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கற்றல், கற்பித்தலை மேம்படுத்துவது, ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பது, பணியிடை பயிற்சி வழங்குவது ஆகியவை இவர்களின் பணியாகும். இத்திட்டத்திற்கென மாவட்டந்தோறும் செயல்பட்டு வரும் அலுவலகங்களில், 250க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
Kaninokkalvi.blogspot.com
பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது.  ஆனால், அதே துறையின் கீழ், எஸ்எஸ்ஏ.,வில் பணிபுரிந்து வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு கலந்தாய்வு குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.  ஒரே இடத்தில் 8 ஆண்டுகள் வரை கூட சில மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இவர்களை இடமாற்றம் செய்யாதது ஏன்? என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்க பொதுச்ெசயலாளர் ராம்குமார் கூறியதாவது:  தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையில் மூன்றாண்டுகள் பணி முடித்தவர்களை,  இடமாறுதல் செய்வது தொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாற்றம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 'Kanninalvi' எஸ்எஸ்ஏ சார்பில் செயல்படுத்தப்படும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) பள்ளி திட்டத்தின் மூலம் மட்டும், மாதந்தோறும் ஒரு மாவட்டத்திற்கு ₹7 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இதுதவிர, பள்ளி செல்லா குழந்தை திட்டம், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வித்திட்டம் உள்ளிட்ட 8 வகையான திட்டத்தின் மூலம், பல கோடி ரூபாய் வெளிவருகிறது.இதனை அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்கின்றனர். இதனால், மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருப்பவர்கள், அதிகபட்சம் 8 ஆண்டுகள் வரை கூட ஒரே இடத்தில், அப்பதவியில் இருந்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒருமுறை கூட இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படவில்ைல.

இதனிடையே, கடந்த ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக விருப்பம் தெரிவித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர் பயிற்றுநர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம், இப்பணி மிகவும் கடினமானது, அலைச்சல் அதிகம், உங்களால் சமாளிக்க முடியாது என அதிகாரிகள் மூளைச்சலவை செய்து, விருப்பம் இல்லை என கடிதம் எழுதி வாங்கிய சம்பவங்களும் பல இடங்களில் நடந்தது.

கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு வரை வட்டார வள மைய மேற்பார்வையாளர்களாக இருந்தவர்களை அப்பதவியில் இருந்து விடுவித்ததுடன், தங்களுக்கு சாதகமான ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் உள்ளவர்களை இப்பதவிக்கு நியமித்தால், தங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்க முடியாது என இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. Kaninikkalvi.blogspot.com

கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளும் அரங்கேறி வருகிறது.எனவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்த, எஸ்எஸ்ஏ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு, நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் ராம்குமார்  தெரிவித்தார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews