வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் பொதுவாக ஒருவரின் ரெஸ்யூமை சுமார் முப்பது அல்லது நாற்பது செகண்டுக்கு மேல் படிக்க வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
முதல் நான்கு வரிகளிலேயே இது தேறும், தேறாது என பிரித்துவைத்துவிடுவர்களாம். எனவே வெண்டைக்காய்போல வழ வழ கொழ கொழவென்று எழுதுவதை விடுத்து, எழுதுவதை சுருக்கமாக எழுதுவது நல்லது.
அடிப்படைகள்:
விண்ணப்பிக்கும் முன் முதலில் பெயர், போன் நம்பர், இ-மெயில் முகவரி போன்றவைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஒரு முறைக்கு இரு முறை பாருங்கள் எனென்றால் இதுவெல்லாம் அடிப்படையான விஷயம் தேர்வு பெற்றால் கூட இது சரியாக இருந்தால்தான் வீட்டிற்கு மின்னஞ்சலே, கடிதமே வர வாய்ப்புள்ளது.
ரெஸ்யூமில் மறந்துகூட இதெல்லாம் பண்ணாதீங்க!
அறிமுகம்:
அறிமுகம் என்று தலைப்பிட்டு நான்கு வரிகளில் உங்களைப் பற்றிக் கூற வேண்டும். இதைத்தான் ரெஸ்யூமில் முதலில் பார்ப்பார்கள். பார்த்ததும் பிடிக்கும் படி இதர போட்டியாளர்களை மிஞ்சும் விதத்தில் நான்கு வரிகளில் விளக்க முடியும் என்றால் வேலை நமக்குதான்.
அனுபவம்:
உதாரணமாக, ஒரு முன்னணி நிறுவனத்தில் ஐந்து வருடங்களாக குறிப்பிட்ட துறையில் வேலை செய்த அனுபவம் உண்டு என்றால் அதை மட்டும் குறிப்பிடாமல் அந்த நிறுவனத்தில் நாம் ஆற்றிய பணி என்ன என்பதை குறிப்பிடுவது அவசியம்.
கல்வித் தகுதி:
இதில் படித்த டிகிரியோடு மட்டுமல்லாமல் கல்லூரியில் செய்திருக்கும் புராஜெக்டின் தலைப்பை குறிப்பிடுங்கள். அதுமட்டும் இல்லாமல், புராஜெக்ட் குழுவில் உங்களின் பங்களிப்பைப் பற்றியும் ஒரு வரியில் குறிப்பிட மறக்காதீர்கள்.
பர்சனல்:
இதில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எடுத்துக்காட்டாக முகவரி, பெற்றோர் பெயர், திருமணம், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களைக் குறிப்பிடலாம்.
காப்பி பேஸ்ட்:
ரெஸ்யூமில் பெயரை மட்டும் மாற்றி 'ஈயடிச்சான் காப்பி' அடிக்காதீர்கள். அதே போல் அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் கையில் கிடைக்கும் கலரைக்கொண்டு வண்ணம் தீட்டுவதை விடுத்து எளிமையாக பார்த்த உடன் பட்டென்று புரியும் படி இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.