வரும் கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார். சென்னை ஐஐடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, இந்த ஆண்டைப் போல் அல்லாமல், வரும் கல்வியாண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதும் நிலை ஏற்படாது. மாநில அரசுப் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும். நீட் வினாத்தாள்களில் குளறுபடிகளைத் தவிர்க்க, தமிழக அரசு நல்ல மொழிபெயர்ப்பாளர்களை நீட் தேர்வுக்கான வினாத்தாளை தயாரிக்க அனுப்ப வேண்டும் என்று கோரப்படும். நான்கு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் அதிகளவில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படும். தேசிய கல்விக் கொள்கை விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.