Flash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 28, 2018

Comments:0

Flash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு : நீட் தேர்வில் மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று பட்டியலில் முதலிடம்



சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜூன் 10ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் பணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றனர்.

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தனர். ஜூன் 19ம் தேதி மாலை வரை 43,935 விண்ணப்பத்தை சமர்பித்திருந்தனர். தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 6,500 இடங்கள் உள்ளன.ஜூலை 1ம் தேதி முதல் தேதி முதல்கட்ட கலந்தாய்வை தொடங்கவும், ஜூலை 2வது வாரத்தில் 2வது கட்ட கலந்தாய்வையும் நடத்தி, செப்டம்பர் 30ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க மருத்துவகல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை தருமபுரி மாணவர் அபிஷேக்கும், 3வது இடத்தை சென்னை மாணவர் பிரவீனும் பிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மொத்தம் 25,417 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்று கூறினார். மேலும் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆண்கள் 10,473 பேர், பெண்கள் 17,593 பேர் மற்றும் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர் பொதுப் பிரிவில் விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 28,067 ஆக உள்ளது என்றும் 5% ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறினார். இதனிடையே ஜூலை 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews