"கல்வித் துறை பணியாளர்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கூடாது' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 04, 2018

1 Comments

"கல்வித் துறை பணியாளர்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கூடாது'


கல்வித் துறை அலுவலகங்களைப் பிரிக்கும்போது இத்துறையின் பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யக் கூடாது என தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான்முத்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பள்ளிக் கல்வித் துறையில் 32 முதன்மைக் கல்வி அலுவலகங்கள், 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள், 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 836 உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், 18 மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் அலுவலகங்கள், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம், 3 பள்ளிக்கல்வித் துறை தணிக்கை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

நிர்வாகத்தை மேலும் சீர்படுத்த: பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தை மேலும் சீர்படுத்த அரசாணை எண் 101 மூலம் அனைத்து வகை பள்ளிகளையும் உள்ளடக்கிய 500 பள்ளிகளுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலகம் என்ற அடிப்படையில் கல்வி அலுவலகங்களைப் பிரிக்க ஆணையிட்டு, அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தற்போது நடைமுறைப்படுத்திட உள்ளனர்.  பணியாளர்களின் நலன் காக்க: கல்வித் துறை அலுவலகங்களைச் சீரமைக்கும்போது, பணியாளர்களின் மாறுதல் என்பது தவிர்க்க முடியாது. எனவே, வருவாய் மாவட்டத்துக்குள் பணியாளர்கள் மாறுதல் என்பது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியாளரின் விருப்பம், கலந்தாய்வின் மூலம் அவர்களை அலுவலகங்களுக்கு நியமனம் செய்தால், பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். மேலும், அலுவலகங்கள் வாரியாக பணியிடங்களை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. தினகரன்
    தஞ்சாவூர்
    2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்
    4 June 2018, 2:04 am
    பட்டுக்கோட்டை, ஜூன் 4: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்ைக விடுத்துள்ளது. தமிழக அரசுக்கு தமிழ்நாடு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணிவாய்ப்பு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனே பணி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

    அதை ஏற்று உடனடியாக 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.


    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்று உள்ளதை 1: 30 என்று உருவாக்கினால் மட்டுமே கூடுதலான ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்படும். படித்து முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடக்க கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 30 என்று உள்ளது.

    இதேபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர், மாணவர் விகிதம் 1: 30 என உருவாக்க வேண்டும். 2013ல் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்கள் அந்த தேர்ச்சி சான்றை வைத்து கொண்டு 7 ஆண்டுகளுக்குள் மட்டுமே பணிவாய்ப்புகள் பெற முடியும். தற்போது 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பணி கிடைத்தால் மட்டுமே அந்த தேர்ச்சி சான்று பயன்படும். ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றும் இதுவரை ஆசிரியர் பணி பெற முடியாத ஆசிரியர்கள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர். எனவே தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் காலி பணியிடங்களை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கொண்டே ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு துரிதமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெதரிவிக்கப்பட்டுள்ளது. பிஎட் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை ç ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 40 என்று உள்ளதை 1: 30 என்று உருவாக்கினால் மட்டுமே கூடுதலான ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்படும். படித்து முடித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடக்க கல்வியில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1: 30 என்று உள்ளது.

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    2013 ஆசிரியர் தகதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் எங்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு பிஎட் பட்டதாரி ஆசிரியர் சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
    🙏💐💐💐💐

    இவண்
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
    வடிவேல் சுந்தர்
    மாநில தலைவர்


    ம.இளங்கோவன்
    மாநில ஒருங்கிணைப்பாளர்
    8778229465

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews