தமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு வசதியாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வேலை வாய்ப்பு துறை தன்னார்வ பயிலும் வட்டம் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 'ஸ்மாட் கிளாஸ்' ரூம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
100 பேர் அமர்ந்து படிக்க, குளிர்சாதன வசதியுடன் கூடிய பெரிய அறை, கணினி, இன்டர்நெட் வசதி, பாடம் நடத்த லேட்டஸ்ட் புரொஜக்டர், பெரிய, எல்.இ.டி., 'டிவி' நுாலகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், போட்டி தேர்வர்கள் திறன்மேம்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.