சிடிஇடி ( மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வு ) தேர்வானாது இனி மூன்று மொழிகளில் மட்டுமே நடைபெறும் என்று சிபிஎஸ்இ தகவல் வெளியிட்டுள்ளது.
சிடிஇடி என்பது மத்திய ஆசிரியர் நியமன தகுதிக்கான தேர்வாகும். மத்திய அரசின் கீழ் இயங்கும் நவோதியா பள்ளிகள் , கேந்திர்யா வித்யாலயா மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஆசிரியர்பணிகளை நிரப்ப இந்த தகுத் தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வானது கடந்த ஆண்டுவரை 17 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட்டு வந்தது.ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் தமிழ், மலையாளம் , தெலுகு, கன்னடம் , குஜராத்தி, பெங்காளி போன்ற 17 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில்தான் இந்த தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதானால் தமிழ் போன்ற மற்ற மொழியில் தேர்வெழுதுவோர் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதில் paper 1 மற்றும் paper 2 என்றுஇரு தேர்வுகள் நடைபெறுகிறது . 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புவரை பாடம் நடத்தும் ஆசியர்கள் paper 1 தேர்வை எழுதுவார்கள் . 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள்paper 2தேர்வை எழுதுவார்கள் .
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.