க்ரோம் முன்பு எந்தெந்த தளங்கள் பாதுகாப்பு இல்லாமல் (http) இருந்ததோ அவற்றை “Not Secure” என்றும் https தளங்களை “Secure” என்றும் கூறி வந்தது..
இதனால் பயனாளர்கள் பாதுகாப்பற்ற தளங்களை நாடுவதைக் குறைத்ததால் ஏற்பட்ட நெருக்கடியில் அனைத்து தளங்களும் https முறைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.kaninikkalvi.blogspot.in
இதனால் கிடுகிடுவென்று https க்கு மாறும் தளங்கள் அதிகரித்தன.
இதனால் இணையத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலானோர் க்ரோம் உலவி பயன்படுத்துவதால், தளங்கள் https க்கு மாறி ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது கிட்டத்தட்ட பெரும்பாலான தளங்கள் https க்கு மாறி விட்டன.kaninikkalvi.
பாதுகாப்பற்ற தளங்கள் குறைந்ததால், இனி https தளங்களுக்கு “Secure” என்ற பச்சை நிற குறியீட்டை நிறுத்தப்போவதாக க்ரோம் உலவி அறிவித்துள்ளது.

இனி http யாக உள்ள தளங்கள் அனைத்தும் பாதுகாப்பற்ற தளங்களாகக் கருதப்பட்டு “Not Secure” என்று காட்டப்படும்.
http தளத்தில் உங்கள் தகவல்களை (பயனர் கணக்கு, கடவுச்சொல்) உள்ளீடு செய்தால், “Not Secure” என்று பின்வரும் படத்தில் போலக் காட்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.