கூகுள் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிதான் நட்ஜ் என்னும் வசதி.
இந்த வசதி ஜிமெயில் பயன்படுத்துவோர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த வசதி கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் தற்போது கிடைத்துள்ளது.kaninikkalvi.blogspot.in இதன் மூலம் நாம் பார்க்க மறந்த ஜிமெயில்கள் முதலில் தோன்றி நமக்கு ஞாபகப்படுத்தும். இந்த வசதி ஒவ்வொரு ஜிமெயில் பயனாளிகளுக்கும் தானாகவே கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.
சர்வெர் மூலம் அப்டேட் செய்யப்பட்டவர்களுக்கு ஜிமெயிலின் இந்த புதிய வசதி தானாகவே கிடைத்துவிடும். அதாவது ஜிமெயில் வி8.4.22 மற்றும் பழைய வெர்ஷனான வி8.4.8 ஆகிய ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் இந்த வசதி கிடைக்கும். அதேபோல் ஐஒஎஸ் மொபைல் போன் பயனாளிகளுக்கு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் வி5.0.180422 என்ற வெர்ஷனில் இந்த புதிய வசதி செயல்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.