அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 30, 2018

Comments:0

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு




அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதனைக் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்றும், ரூ.9 கோடி செலவில் பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வருகை நேரத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், பயோ மெட்ரிக் முறை ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்

68 ஆக உள்ள கல்வி மாவட்டத்தை அதிகரித்து 120 ஆக எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளை ஆய்வு செய்வது இதன் மூலம் எளிதாக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருகை பதிவுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரூ.9 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews