ஓரிரு நாளில் கால்நடை மருத்துவ விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 18, 2018

Comments:0

ஓரிரு நாளில் கால்நடை மருத்துவ விண்ணப்பம்


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்னும் ஓரிரு நாளில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்., சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



ஆனால், கால்நடை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கும் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பது உண்டு. 



பிற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டு கால்நடை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஆர்வம் காட்டுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் ஓரிரு தினங்கள் கால்நடை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி) படிப்புக்கு நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன.



இது தொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன் கூறுகையில், விண்ணப்ப விநியோகம் தொடங்குவதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 



கடந்த ஆண்டைப் போல நிகழாண்டும் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்றார் அவர்.





No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews