சிறுபான்மை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களில் 50 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும்படி தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசு ஆணையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளிட்ட சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையில் குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவில் சிறுபான்மை மாணவர்களை சேர்க்க வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சிறுபான்மை மாணவர்களின் கல்வி பாதுகாப்பு கருதி தமிழகத்திலும் கூடுதல் வழிகாட்டுதல்களை மைனாரிட்டி கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.
ஒரு சில சிறுபான்மை நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான சிறுபான்மை மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தால் அவர்களுக்கு எந்த தகுதித் தேர்வும், நிபந்தனையும் இன்றி அனைவரையும் சேர்க்க வேண்டும்.
இதில் அவர்களது பொருளாதார நிலை, கல்வி நிறுவனத்தின் தொலைவு, மாணவர்கள், பெற்றோர்களின் கல்வி நிலைமை ஆகியவற்றை பார்க்கக்கூடாது.
அரசு உதவி பெறும் சிறுபான்மையின பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சிறுபான்மை பிரிவு மாணவர் சேர்க்கை 75 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது.
50 சதவீத மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறக்கூடாது.
தமிழகத்திற்குள் வாழும் சிறுபான்மையின மாணவர்கள் மட்டுமே இந்த சதவீத இடஒதுக்கீட்டில் சேர உரிமை உள்ளது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவு குறித்த சுற்றறிக்கையை மெட்ரிகுலேஷன் ஆய்வாளர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி இதன்படி மாணவர் சேர்க்கையை பின்பற்றும்படி உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நடைமுறைகள் வரும் கல்வியாண்டில் இருந்து தீவிரமாக அமலுக்கு வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.