கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி: பிரதமர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

Comments:0

கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி: பிரதமர்



நாட்டின் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தாகூர் கொள்கைகள் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள விஸ்வ பாரதி பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

இங்கு வந்த போது, முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என சில மாணவர்கள் குறை கூறினர். இதற்கு, விஸ்வ பாரதி பல்கலை வேந்தர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உலகம் முழுதும் தாகூர் போற்றப்படுகிறார். 21ம் நூற்றாண்டிலும் தாகூரின் கொள்கைகள் பயனுள்ளதாக உள்ளது. அவரின் நவீன கொள்கைகள் இந்தியாவை தாங்கி பிடித்துள்ளது. தாகூரின் கொள்கைகள் இந்தியாவை தாண்டி உலகம் முழுதும் பிரதிபலிக்கின்றன.kaninikkalvi.
தாகூர் உலக குடிமகன்.

டிஜிட்டல் மயம்: வங்கதேச பிரதமர் இங்கு வந்துள்ளார். இந்தியாவும், வங்கதேசமும் வெவ்வெறு நாடுகள் என்றாலும், நலன்கள் தொடர்படையவை கலாசாரம் மற்றும் பொது கொள்கை ஆகியவற்றில் ஒவ்வொருவரும் மற்றவரிடத்தில் இருந்து கற்று கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களில் நடப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என தாகூர் விரும்பினார்.

2021க்குள் இந்தியா டிஜிட்டல் மயமாகும். நாட்டில், கல்வி முறையை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு செலவிடும். உங்களது வளர்ச்சிக்கு, நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், அரசு நான்கு அடி எடுத்துவைக்கும். இவ்வாறு அவர் பேசினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews